அத்தியாவசிய சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
Government Of Sri Lanka
New Gazette
By Vanan
எரிபொருள் விநியோகம், மின்சாரம் வழங்கல் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதிபரின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது.
அத்தியாவசிய சேவை
இதன்படி, மின்சார வழங்கலுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும், கனியவள உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக உள்ளன.
அத்துடன், வைத்தியசாலைகள், தாதிய இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்