வடக்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை..!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் விசேட சோதனை நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் ஏ9 பிரதான வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் மூன்று இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து இன்றைய தினம்(04) சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள் இரு இடங்களில் வழிமறிக்கப்பட்டு வாகன ஆவணங்கள் சோதிக்கப்பட்டதுடன், மோப்ப நாய்களின் உதவியுடன் வாகனங்களின் உற்பகுதியும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
அத்துடன், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஒர் இடத்தில் வழிமறிக்கப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோதனை நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள்கள், பேருந்துகள், பாரவூர்திகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |