தென்னிலங்கை பாடசாலைகளில் பரவும் வைரஸ் காய்ச்சல்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
மாத்தறை - தெனியாய பகுதியில் மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் நிலைமையை ஆய்வு செய்ய விசேட மருத்துவக் குழுவொன்று அப்பகுதிக்கு செல்லவுள்ளனர்.
குறித்த விடயத்தை மாத்தறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ் தெனியாய வலய கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொடவின் உத்தரவின் பெயரில், தெனியாய வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளை நேற்று (07) மற்றும் இன்று (08) மூட உத்தரவிடபட்டிருந்தது.
வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள்
அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போதைய நிலைமை பெருந்தொற்று மட்டத்திற்கு உயரவில்லை என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் குறித்த பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானம், சுகாதாரத் துறையின் மேலதிக அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் என தென் மாகாண கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரன தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |