ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பு! (படம்)
அமெரிக்காவின் முன்னாள் செனட் சபை உறுப்பினர் பொப் கெரிக்கும் (Bob Kerrey) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகராகவும் பனிபுரிந்தவராவார்.
இரு நாடுகளையும் பாதிக்கும் பல பொதுவான பிரச்சினைகள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது எடுத்துரைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவின் பிரகாரம் செயல்படுத்தப்படும் "மூச்சு" மற்றும் "பிரபஞ்சம்" திட்டங்கள் குறித்து பொப் கெரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் தொடர்புடைய நலன்புரித் திட்டங்களில் அமெரிக்க பரோபகாரர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வலியுறுத்தினார்.
