வடக்கு ஆளுநரிடம் எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய உறுதிமொழி
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென அதிபரின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தார்.
பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று(20) நடைபெற்றது.
பச்சை ஹைட்ரஜன் திட்டம்
வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரால் இதன்போது எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட எரிக் சொல்ஹெய்ம், இலங்கை விஜயத்தின் போது, வடக்கு மாகாண ஆளுநரை முதலில் சந்திக்க கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
இலங்கையின் வளர்ச்சிக்கான பசுமைத் திட்டங்களை முன்னெடுப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சூரிய, காற்றாலை, நீர் மின் உற்பத்திக்கான வளங்களை இலங்கை கொண்டுள்ளமையால், பச்சை ஹைட்ரஜன் (green hydrogen) திட்டத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 2 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்