பிரதேச சபை பெண்களுக்கு யாழ்ப்பாணத்தில் விசேட செயலமர்வு (Photos)
பிரதேச சபை பெண்களை வலுவூட்டும் நோக்கிலான செயலமர்வு இன்று யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது.
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின், கீழ் பிரதேச சபை பெண்களுக்கான "தேவை மதிப்பீடு மற்றும் வளங்களைக் கண்டறிதல், அதற்கமைவான வள வரைபடம் தயாரித்தல், சமூகப் புள்ளியிடல் அட்டை பற்றிய பயிற்சி” போன்ற விடயங்கள் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றப் பெண்களுக்கு இதுவரை வளங்களை கண்டறிதல் தொடர்பாக அளிக்கப்பட்ட தொடர் பயிற்சிகளுக்கான முடிவில் திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் பற்றிய தெளிவுட்டல்களும் வழங்கப்பட்டன.
சேர்ச் போர் கொமன் கிரவுண்ட் நிறுவனம், உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


