ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய பதவியை இராஜினாமா செய்த சிறப்பு உறுப்பினர்!
Investigation
Sri Lanka
Gotabhaya Rajapaksa
By Vasanth
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த மூன்று சிறப்பு உறுப்பினர்களில் ஒருவர் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்கவே இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். சோபித ராஜகருணாவை புதிய உறுப்பினராக நியமித்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.