அரசியல் கட்சிகளுக்கு பரீட்சை ஆணையாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Jaso
எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தரம் 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12.15 மணிவரை நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
எனவே, பரீட்சை நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் எனவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி