நகைகளை அடகு வைத்த மக்களுக்கு சலுகை...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள விடயமானது தேர்தலில் வாக்களிப்பதற்கு வழங்கப்படும் இலஞ்சமா என கொழும்பு பல்கலைக்கழத்தின் (University of Colombo) பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
எனினும் கடந்த கால பொருளாதார நெருக்கடிகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான இலங்கை மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் அனுபவிக்க தகுதி உடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே கொழும்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தங்க நகை அடமானம்
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னர் நாட்டில் தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது.
இவ்வாறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளை இதுவரை மீட்க முடியாத இக்கட்டான நிலையில நாட்டில் பலர் உள்ளனர். இந்தநிலையில், தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எந்தவித கரிசனையும் காட்டாமல் இருந்த அரசாங்கம் தங்க நகை அடமானம் தொடர்பில் கொண்டு வரும் திட்டம் எந்த அளவு நம்பகமானது என சந்தேகம் எழுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக விரிவான தகவல்களை கொண்டு வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |