நாடு தழுவிய சுற்றிவளைப்புகள்: 1,461 சந்தேக நபர்கள் சிக்கினர்!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, 46 வாகனங்கள் மற்றும் 51 மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆயுதப்படைகளில் இருந்து தப்பி ஓடியவர்கள்
அத்தோடு, இந்த நடவடிக்கையின் மூலம் குற்றங்களுக்கு நேரடியாக பங்களித்த 107 பேரும், ஆயுதப்படைகளில் இருந்து தப்பி ஓடிய 7 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹெராயின், ஐஸ், கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி