அதிர வைத்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: இஷாராவை வலைவீசித் தேடும் காவல்துறை
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி எனும் சந்தேக நபரை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியைக் கொண்டு வந்தவரென என அடயாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைக்குப் பின்னர் தப்பிச் சென்றிருந்த குறித்த பெண் வேறு நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
விசேட நடவடிக்கை
எனினும், அந்தப் பெண் நாட்டினுள்ளேயே தலைமறைவாகியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை (Dehiwela) மற்றும் மத்துகம பகுதிகளில் பல இடங்களில் நேற்று (23.02.2025) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 18 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்களை 48 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல நேற்று அனுமதியளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்