பொங்கல் தினமன்று சிறையிலுள்ள இந்து கைதிகளுக்கு கிடைத்த வாய்ப்பு
Thai Pongal
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளை பொங்கல் தினமான 14 ஆம் திகதி பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு சிறைச்சாலைத்திணைக்களம் ஒரு சிறப்பு வாய்ப்பை ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 14 ஆம் திகதி தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து கைதிகளுக்கு இந்த சிறப்பு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
அன்றைய தினம், இந்து கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு மட்டும் போதுமான உணவு மற்றும் இனிப்புகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள்.
சிறைச்சாலை ஆணையாளரின் தகவல்
அதன்படி, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பார்வையாளர்களை வரவேற்கும் நடவடிக்கைகள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி