சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிவேண்டி விசேட மனு
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் அமைந்துள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி வளாகத்தில், நேற்றைய உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தலில் வெளிப்படுத்தப்பட்ட மனுவில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 186 பொதுமக்கள் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களில் 85 பெண்களும், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்களும், 25 வயோதிபர்களும் அடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர், முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினர் ஈடுபட்டதாக நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |