காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்றிட்டம்
Missing Persons
Jaffna
Dr Wijeyadasa Rajapakshe
By Vanan
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்றிட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் யாழில் சில நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்றிட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்து பௌத்த கலாசார பேரவையின் அழைப்பில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளேன்.
குறிப்பாக காணமால் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சில செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி