நாடு முழுவதும் விசேட நடவடிக்கையில் 1,241 நபர்கள் கைது
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கைகளின் போது, 254,679 மில்லிகிராம் ஐஸ் , 112,567 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,738,356 மில்லிகிராம் கஞ்சா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
விசேட நடவடிக்கைகள்
அத்தோடு, 7,922 வாகனங்கள் மற்றும் 6,545 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உட்பட ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனுடன், நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட 18 நபர்களும் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக 321 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஏப்ரல் 13 முதல் நாடு முழுவதும் இந்த விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
