ஈரானில் யாருமே விரும்பாத அந்த உயர்மட்ட தலைமை பதவி! அமெரிக்கா கிண்டல்
தற்போது உலகில் யாரும் விரும்பாத வேலை என்றால் அது ஈரான் இராணுவத்தின் உயர்மட்ட தலைமைப் பதவிதான் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
அவை தற்காலிக வேலைகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஒருதிசை ட்ரோன் தாக்குதல்கள், போரின் தொடக்கத்திலிருந்து 90% வரை குறைந்துள்ளதாக ஹெக்ஸெத் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பிற்கு நன்றி
அத்தோடு, அமெரிக்கா, ஈரானின் குறைந்தது 120 கடற்படை கப்பல்களை சேதப்படுத்தி அல்லது மூழ்கடித்து, அதன் மேற்பரப்பு கடற்படை தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ளது என்றும், நீர்மூழ்கிக் கப்பல்கள் இல்லாமல் போய்விட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானை பற்றி அவர் மேலும் கூறுகையில், “அத்தகைய ஆட்சி தனது அணு திட்டங்களை கைவிட மறுப்பதால், அது ஒரு பிராந்திய பிரச்சினை மட்டுமல்ல; அது அமெரிக்காவுக்கும், சுதந்திரத்திற்கும், நாகரிகத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாகும்” என்றார்.
மேலும், உலக நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்கு, ஐரோப்பாவில் உள்ள கூட்டாளிகள் மற்றும் ஊடகங்களும் டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் அவர் பீட் ஹெக்ஸெத் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |