இது எங்கள் போர் அல்ல: ட்ரம்பின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்த ஐரோப்பா

Donald Trump Iran Europe
By Dharu Mar 19, 2026 10:15 AM GMT
Report

ஈரானை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில் இணைவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த  அழைப்பை ஐரோப்பிய நாடுகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.

குறிப்பாக, ஃபிரெட்ரிக் மெர்ஸ்(Friedrich Merz) தலைமையிலான ஜெர்மனி, இந்த மோதலில் நேரடியாக ஈடுபடமாட்டோம் என்று உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இது குறித்து மெர்ஸ், ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஈரான் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இந்தப் போரின் நோக்கம் மற்றும் முடிவுகள் குறித்து தங்களுக்கு தெளிவில்லை எனக் கூறியுள்ளனர்.

குவைத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்

குவைத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை

மேலும், “இந்த நடவடிக்கை எவ்வாறு வெற்றி பெறும் என்பதற்கான நம்பகமான திட்டம் எதுவும் எங்களிடம் பகிரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது எங்கள் போர் அல்ல: ட்ரம்பின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்த ஐரோப்பா | This Is Not Our War Europe S Rebuttal Trump

அதேவேளை, உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் திறக்க இராணுவ உதவி வழங்குமாறு அமெரிக்கா கேட்டிருந்தது.

இருப்பினும், ஜெர்மனி அதனைத் தெளிவாக மறுத்து, “போர் நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணையில் இராணுவ பங்கேற்பு இல்லை” என்று அறிவித்துள்ளது.

இந்த நிலைப்பாட்டை ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மேலும் வலுப்படுத்தினார்.

துபாய்க்கான விமான சேவைகள் ஏப்ரல் இறுதி வரை நிறுத்தம்! முக்கிய நிறுவனத்தின் முடிவு

துபாய்க்கான விமான சேவைகள் ஏப்ரல் இறுதி வரை நிறுத்தம்! முக்கிய நிறுவனத்தின் முடிவு

எங்கள் போர் அல்ல 

“இது எங்கள் போர் அல்ல இதை நாங்கள் தொடங்கவில்லை,” என்று அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

இது எங்கள் போர் அல்ல: ட்ரம்பின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்த ஐரோப்பா | This Is Not Our War Europe S Rebuttal Trump

இதேபோன்று, இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான பிரான்ஸும், “இந்த மோதலில் நாம் ஒரு தரப்பாக இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக இந்தப் போரில் நேரடி ஈடுபாட்டிலிருந்து விலகியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்ததன் மூலம், ஏற்கனவே உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் அழுத்தத்தில் உள்ள அட்லாண்டிக் கடந்த உறவுகள் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! வெளியான பின்னணி

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! வெளியான பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023