புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை
Batticaloa
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் புது வருட பிறப்பு முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புளியந்தீவு மரியாள் தேவாலயம், தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயம், ஈஸ்ட்டர் குண்டு தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயம், மற்றும் இதர மெதடித்த தேவாலயங்கள், என்ன மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழிபாடு
ஆலய நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் வழிபாடுகளுக்கு வரும் பொதுமக்கள் தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு பிரிவினர் தேவாலயங்களைச் சூழ பலத்த பாதுகாப்பு கடமைககளில் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்