தொடருந்தில் பயணிப்போருக்கு வெளியான அறிவித்தல்!
Thai Pongal
Sri Lanka
Sri Lanka Railways
By Harrish
எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு 4 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுத்துள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த விசேட புகையிரத சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவை
கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு தொடரந்து புறப்படும் என்றும் மற்றைய தொடருந்து பதுளையில் இருந்து மாலை 5.40 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் என்று தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்குப் போதுமான பேருந்துகள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்