கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம் : வெளியான தகவல்
SJB
Ajith Perera
Cope Committee Sri Lanka
By Sathangani
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (Ajith P. Perera) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பாரம்பரிய நடைமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியின் நிலைப்பாடு
கோப் குழுத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் மட்டுமே செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழ்நிலையில் ஏனைய நாடாளுமன்றக் குழுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்