பண்டிகை காலத்தை முன்னிட்டு காவல்துறை செயற்படுத்தும் விசேட பாதுகாப்பு திட்டம்
புதுவருடப் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறை அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் செயல்பத்தப்படவுள்ளது.
அதன்படி, பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
விசேட போக்குவரத்து திட்டங்கள்
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொடருந்து நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் திட்டங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்த சிறப்பு நடவடிக்கை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டு, பண்டிகைக் காலம் முடிந்து மக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குத் திரும்பும் வரை செயல்படுத்தப்படும் என பிரதிப் காவல்துறை அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |