நியூசிலாந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கீடு செய்தது யார்?? வெளியவந்த தகவல்
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் (Jacinda Ardern) உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு குறுக்கீடு ஏற்படுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல என்று அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில்,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றிய போது, திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்தக் குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல. பிரதமரின் 3 வயது மகள் நெவ்விடம் இருந்தே வந்தள்ளது.
மகள் நெவ், ‘மம்மி’ என அழைத்தவாறு அங்கே வந்து விட்டாள். அதைக்கண்டு அதிர்ந்து போனார் பிரதமர் ஜெசிந்தா.
இருந்தாலும், “நீ படுக்கையில் அல்லவா இருக்க வேண்டும், டார்லிங்” எனக் கூறி சமாளித்தார். தொடர்ந்து, “நீ படுக்கையில் இருக்க வேண்டும் டார்லிங். ஒரு வினாடியில் நான் வந்துவிடுகிறேன்” எனக் கூறினார்.
பின் அவர் கமராவைப் பார்த்து, “தூங்கும் நேரம் தவறி விட்டது இல்லையா?” எனச் சிரித்து நாட்டு மக்களை சமாளித்தார். இதுபற்றிய செய்தி அறிந்த அனைவரும், நாட்டுக்கே பிரதமரானாலும், தன் குழந்தைக்கு அவர் தாய் அல்லவா என சிலாகித்துப்போயினர் - என்று கூறப்பட்டுள்ளது.