ஜேர்மனியில் பரபரப்பு : மக்கள் கூட்டத்திற்குள் நடந்த அனர்த்தம் : பலர் படுகாயம்
ஜேர்மனியின்(germany) மன்ஹெய்ம் நகரில் இன்று(03)அதிவேகமாக சென்ற கார் மக்கள் கூடும் இடத்தில் புகுந்ததில் இருவர் பலியாகினர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் தற்போது கார்னிவெல் பருவகாலம் என்பதால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் நகரவாசிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
கூட்டத்தின் மீது புகுந்த கார்
இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்திதொடர்பாளர் ஸ்டீபன் வில்ஹெல்ம் தெரிவிக்கையில், மன்ஹெய்ம் நகரின் நடைபாதை தெருவான பாரடேப்ளாட்ஸில், ஒரு கருப்பு நிற எஸ்.யு.வி., காரை ஓட்டி வந்தவர் அதிவேகமாக வந்து கூட்டத்தின் மீது புகுந்ததில் இருவர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
காரை ஓட்டி வந்த 40 வயதான நபர் கைது செய்யப்பட்டார். பொதுமக்களிடம் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு ஸ்டீபன் வில்ஹெல்ம் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
