டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் சிறிலங்கா - நாமல் வெளியிட்ட தகவல்
சிறிலங்காவின் எதிர்காலப் பயணம் டிஜிட்டல் மயமாக்கலில் தங்கி இருப்பது மிகவும் தெளிவானது எனவும் கொரோனா பரவலுடன் டிஜிட்டல் மயப்படுத்தலின் அதிகமான பயனை நன்கு உணர்ந்துக்கொள்ள முடிந்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் எதிர்காலப் பயணம் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கொரோனா தொற்று நோயில் இருந்து விடுப்படும் போது சிறிலங்கா ஒரு தேசமாக உலகத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் அந்த இலக்குகள் யதார்த்தமாக மாறும்.
அடையாள அட்டைகளை டிஜிட்டல் மயப்படுத்தி அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி, டிஜிட்டல் மயப்படுத்த முயற்சித்தாலும், அடையாள அட்டையில் நிதி கொடுக்கல் வாங்கல்களுக்கான வசதிகளை சேர்க்கவில்லை என்றால், அதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.