ரஷ்யாவின் செயற்கைக்கோள் இரகசியங்களை அமெரிக்காவுக்கு வழங்கிய உளவாளி
அமெரிக்காவிற்கு செயற்கைக்கோள் இரகசியங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ரஷ்யா கைது செய்துள்ளது.
அமெரிக்க சிறப்பு தூதர் விட்காஃப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையேயான பேச்சுவார்த்தைக்கு சற்று முன்பு நடந்த பிற நிகழ்வுகளில், ரஷ்ய செயற்கைக்கோள் இரகசியங்களை அமெரிக்காவிற்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தேசத்துரோக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பம் பற்றிய தகவல்
சந்தேக நபர் விண்வெளி செயற்கைக்கோள்களுக்கான மின்னணு இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை 2021 முதல் டிசம்பர் 2023 வரை அமெரிக்க உளவுத்துறை சார்பாக நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்பம் பற்றிய தகவல்களைச் சேகரித்து சேமித்து வைத்ததாக அவர் சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
