இலங்கையில் முன்னணி நகைக்கடைகள் சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்
இலங்கையில் (srilanka) முன்னணி நகை தயாரிக்கும் நிறுவனங்களை சுற்றிவளைத்த சுங்கத்துறை(customs)யினர் கடத்தப்பட்ட தங்கத்தை கைப்பற்றியதுடன் ரூ. 4.5 பில்லியன் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த மோசடியில் சில முன்னணி நகை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து தங்க கடத்தல்
இந்த வணிக நிறுவனங்கள் நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு வரி வருவாயை மறுத்து சட்டவிரோதமான வழிகளில் தங்கத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளுக்காக கைப்பற்றப்பட்ட தங்க கையிருப்பின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சில சுங்க அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழுவொன்று மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறைகளில் பணம்
இந்தியா(india)வில் இருந்து படகுகளில் தங்கப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு சட்டவிரோதமான முறைகளில் பணம் செலுத்தப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |