ஜனாதிபதி தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு
வடக்கு, கிழக்கில் இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) காலைஆரம்பமாகியுள்ளன.
இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் நடைபெறுகின்றது.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 விருந்தினர்களுடன், முப்படை மற்றும் காவல்துறை பிரிவைச் சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட படையினர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு
இதேவேளை இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை (Other Ranks) வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காவல்துறை மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனழிப்பு துவங்கப்பட்ட நாள் 48 நிமிடங்கள் முன்