கடந்த 24 மணிநேரத்தில் 13 பேர் பலியான சோகம்
srilanka
accident
By Vasanth
கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில்13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனவரி 5ஆம் திகதி தொடக்கம் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சுமார் 580 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே வாகன விபத்துக்களில் சிக்கிக் கொள்ளாமல் இம்முறை புதுவருட கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு பொலிஸார் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பாதசாரிகள் மற்றும் சாரதிகள் இது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்