பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியால் ஏற்பட்ட விபரீதம்!
accident
srilankA
By Vasanth
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிட்டம்புவ - கலகெடிஹேன சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதியான நுகதெனிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் பொலிஸ் பரிசோதகரின் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.