கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றமடைந்துள்ள இலங்கை! வெளியானது பட்டியல்
கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றமடைந்துள்ள முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
உலகளாவிய கருத்து சுதந்திர வெளிப்பாடு தொடர்பான புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஃபிஜி (Fiji), பிரேசில் (Brazil), நைஜர் (Niger), இலங்கை (Sri Lanka)மற்றும் தாய்லாந்து (Thailand) ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளன.
கருத்து சுதந்திரம்
25 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, உலகளவில் சுதந்திரமான கருத்து மற்றும் தகவலுக்கான உரிமையின் பகுப்பாய்வை குறித்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது.
உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில் 161 நாடுகளில் இந்த குறிகாட்டிகளின் வெளிப்பாடும் குறித்த ஆய்வில் கண்காணிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், உலகின் பல நாடுகளில் கருத்து சுதந்திரம் பல்வேறு விதமாக அடக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஃபிஜி, பிரேசில், நைஜர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளும் அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா (India), எத்தியோப்பியா (Ethiopia) உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் கருத்து சுதந்திரம் மேலும் அடக்கப்பட்டுள்ளதாக உலகளாவிய கருத்து சுதந்திர வெளிப்பாடு தொடர்பான புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |