கோட்டாவிற்கு உதவிய சிறிலங்கா விமானப்படை : வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), கடந்த 2022 ஜூலை 13ஆம் திகதியன்று, நாட்டில் இருந்து மாலைதீவுக்கு (Maldives) தப்பிச்செல்வதற்கு சிறிலங்கா விமானப்படை நிதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறிலங்கா விமானப்படை (Sri Lanka Air Force) இந்த பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு குறித்து இதுவரை தகவல் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம்
2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, கொழும்பில் (Colombo) இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் இரண்டும் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2022 ஜூலை 13ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் அதிகாலையில் மாலைதீவுக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்டார்.
இதன்போது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி என்ற அடிப்படையிலேயே, கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த விமான வசதிக்கு ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் இன்றைய காலை நேர செய்தியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |