பெண் பணிக்குழாமினருடன் மட்டும் பறந்த சிறிலங்கன் விமானம் (படங்கள்)
இன்றைய தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பெண் ஊழியர்களைக் கொண்ட விமான சேவையொன்றை முன்னெடுத்திருந்தது.
இந்த விமான சேவை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருச்சி வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விமானத்தின் கெப்டனாக சாமிக்கா ரூபசிங்க செயற்பட்டதுடன், விமானிகளாக பிமலி ஜயவர்தன மற்றும் ரொஷானி திஸாநாயக்க ஆகியோர் செயற்பட்டனர்.
பணிப்பெண்கள்

அத்துடன், உபுலி வர்ணகுல பணிக்குழாம் மேற்பார்வையாளராகவும், லக்மினி திஸாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல ஆகியோர் விமான பணிப்பெண்களாகவும் செயற்பட்டனர்.
In recognition of International Women's Day, SriLankan Airlines operated all female crew flight from Colombo to Trichy and return today 8th March 2023. #IWD2023 #InternationalWomensDay #iflysrilankan #SriLankanAirlines pic.twitter.com/ZANazh4juE
— SriLankan Airlines (@flysrilankan) March 8, 2023