சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பலருக்கு அமைச்சுப் பதவி - வெளியானது தகவல்!
சிறிலங்காவின் புதிய அமைச்சர்களையும் இராஜாங்க அமைச்சர்களையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், ஐந்துக்கு மேற்பட்ட அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கமைய, அமைச்சர்களாக நாமல் ராஜபக்ஸ, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சி.வி.விக்னேஸ்வரன், துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவியேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்கள்
அதேவேளை, பிரியங்கர ஜயரத்ன மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த நியமனங்கள் உடனடியாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் அரசியல் சூழலை கருத்திற் கொண்டு எஞ்சிய அமைச்சுக்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

