மீண்டும் வரப்போகிறாரா விடுதலைப்புலிகளின் தலைவர்? நாடாளுமன்றில் கடுமையாக கோபப்பட்ட உறுப்பினர் (காணொளி)
நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் 21 இடங்களில் இன்று சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 10 சாவடிகளில் தமது வாகனம் சோதனையிடப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அதிகளவான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதால், தான், இன்று பாதிக்கப்பட்டதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இன்று பிங்கியவில் இருந்து நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் 21 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 10 சாவடிகளில் தமது வாகனம் சோதனையிடப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட ஒரு நிமிட தாமதம் காரணமாக தம்மால் வாய்மூல கேள்வியை தொடுக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே தமக்கு வாய்மொழி கேள்விக்கு வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என்று அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
எனினும் இதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இது நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் செயல் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் நளின் பண்டார கோாிக்கை விடுத்தார்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிராறா? ஏன் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath weerasekara) இத்தனை சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும் என்று அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை வாய்மூல கேள்வி தொடர்பில் அரசாங்கக் கட்சிக்கு வழங்கப்படும் வரப்பிரசாதம், எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினர்.