ஸ்ரீலங்கா இராணுவத்தின் தொடர் கண்காணிப்பு -புலனாய்வு தகவல்களும் சேகரிப்பு
srilanka
investigation
army
By Vasanth
ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் புலனாய்வுத் தகவல்களை சேகரிப்பதுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரட்ண தெரிவிக்கையில், இலங்கையில் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா இராணுவம் எச்சரிக்கையுடன் உள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸாரும் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் தனியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் சேகரிக்கப்பட்ட தரவுகளை பகிர்ந்துகொள்வதற்கும் படையினரும் பொலிஸாரும் தொடர்ச்சியாக சந்தித்துக்கொள்கின்றனர் கூட்டங்களை நடத்துகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்