இக்கட்டான நிலையில் இலங்கை கோரிய உதவி - இந்தியாவின் பதில் என்ன?
india
sri lanka
loan
By Vanan
இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனைக் கேட்டுள்ளது.
நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தரும்படி இந்தியாவிடம் அரசாங்கம் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கடனுக்கான நிபந்தனைகள் எவை என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.
வெளிநாட்டு செலாவணி இருப்பு நெருக்கடி காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கும் அதுதாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் மாற்றுவழியாகவே இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.