மீண்டும் சிவப்பு வலயத்தில் இலங்கை -மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை
srilanka
corona
redzone
By Sumithiran
கொரோனா அலை மீண்டும் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பொறுப்பான வகையில் செயற்படாவிட்டால் நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்து மீண்டும் சிவப்பு வலயத்தில் நாடு இருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.