சீனாவிலிருந்து முக்கிய பொருள் இறக்குமதி செய்ய தடை? எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிய சிறிலங்கா?
sri lanka
people
china
By Shalini
சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்யப்படாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்தார்.
சீனாவிலிருந்து கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளை தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டது.
எனவே, குறித்த சேதனப் பசளை தொகையை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்தார்.