நாடு பற்றியெரியும்- விடுக்கப்பட்டது எச்சரிக்கை; றோவுடன் பசிலுக்கு உள்ள உறவை அம்பலப்படுத்திய பிரமுகர்!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெரியும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க வேண்டாமென பசில் கூறினார்.
அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்க விடமாட்டார்கள் என்பதாலேயே பசில் அவ்வாறு கூறினார் என்றார். பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது.
பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது. இதேவேளை பசிலின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர்.
இந்தியாவில் திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன்.
இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா?
லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 22 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்