கிழக்கில் மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள ஆபத்தான இடம் - கவனிப்பார் எவருளார்?
srilanka
batticaloa
people
By Vasanth
மட்டக்களப்பு கரையோரப்பிரதேசமான சவுக்கடி, தளவாய் , சுவிஸ் கிராமம் மற்றும் திராய்மடு போன்ற பகுதிகளூடாக செல்லும் பிரதான வீதியில் நீண்ட தூரத்திற்கு சவுக்கு மரங்கள் வளர்ந்து பற்றைக் காடுகளாக சூழ்ந்துள்ளன.
இவ்வாறு வளரந்த இடத்தில் பல்வேறு சமுக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாக இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இப்பகுதியில் போதைப்பொருள் விற்பனை, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
எனவே இது தொடர்பில் இந்த சம்பவங்களை தடுக்க எவர் உள்ளார் என வேதனையுடன் தெரிவிக்கின்றார் அவர்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்