உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்ட அலுவலகம்
srilanka
borella
post office
By Vasanth
பொரள்ளை தபால் அலுவலகம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டது. அந்த தபால் நிலையத்தின் தபால் அதிபர் உட்பட நான்கு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே குறித்த தபால் நிலையம் மூடப்பட்டது.
தபால் அலுவலகத்தில் தற்போது கிருமி தொற்று நீக்கம் நடைபெற்று வருவதாகவும் திங்கள்கிழமை மீண்டும் அலுவலகம் திறக்கப்படுமென தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அலுவலகம் மூடப்பட்டதால் கொழும்பின் சில பகுதிகளிலும் அஞ்சல்சேவைகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி