ஆபத்தின் விளிம்பில் இலங்கை - சடுதியாக அதிகரித்துச் செல்லும் மரணங்கள்
கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் மரண விகிதம் அண்மைய சில நாட்களாக சடுதியாக அதிகரித்துள்ளதால் இலங்கை ஆபத்தின் விளிம்பில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 18 நாட்களுக்குள் 100 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஜனவரி 29 ம் திகதி நாட்டில் 300வது கொரோனா மரணம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 18 நாட்கள் கடந்த போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 தொடக்கம் 8 கொரோனா மரணங்கள் தறபோது பதிவாகி வருகின்றன.
200வது கொரோனா மரணத்தின் பின் 300வது கொரோனா மரணம் பதிவாக சுமார் 30 நாட்கள் சென்றது. ஆனால் 300வது கொரோனா மரணத்தில் இருந்து 400வது கொரோனா மரணத்தை பதிவு செய்ய வெறும் 18 நாட்களே சென்றுள்ளது.
அதன்படி கொரோனா மரண வேகம் அதிகரித்துச் செல்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
you may like this
Tags :