திலினி பிரியமாலி வழக்கு விவகாரம் - புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய மற்றுமொரு பெண்!
இலங்கையில் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் உதவியாளர் என கூறப்படும் பெண் வர்த்தகர் ஒருவரும் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், ஜானகி சிறிவர்தன என்ற பெண் வர்த்தகர் எனவும் இவரை இன்றைய தினம் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் பின்னணியில், வர்த்தகர் ஜானகி சிறிவர்தன செயற்பட்டுள்ளதாக அதிபர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற கோரிக்கை
ஜானகி சிறிவர்தன சுதந்திரமாக இருக்கும் வரை இந்த விசாரணைகளை முறையாக மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், திலினி பிரியமாலிக்கு வர்த்தகர்களை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் ஜானகி சிறிவர்தனவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
கைது
இந்த நிலையில், ஜானகி சிறிவர்தன இன்று காலை சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
