சுசிலின் பதவி நீக்கத்தையடுத்து கோட்டாபயவின் மற்றுமொரு அதிரடி!
gotabaya
susil premajayantha
cabinet
sri Lanka
By Kalaimathy
சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அடுத்த சில தினங்களுக்குள் அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை செய்ய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில், அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அமைச்சரவையில் புதிதாக எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்பதுடன் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்களை செய்ய கோட்டாபய தீர்மானித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி