ரணில் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்பது தொடர்பில் சுயாதீன கட்சிகளின் நிலைப்பாடு!
சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய உத்தேச அனைத்துக் கட்சித் தலைவர்களின் தேசிய சபை மற்றும் உத்தேச நாடாளுமன்றக் குழுக்களில் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு பத்து கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த அவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிவத்த அவர்,
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பையடுத்து, பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 சுயாதீன அரசியல் கட்சி உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று முற்பகல் பிரதமரின் அழைப்பின் பேரில் சுயாதீன கட்சிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுமாறு பிரதமர், 10 கட்சிகளின் தலைவர்களிடமும் கோரியுள்ளதையடுத்தே இந்த தீர்மானம் முன்னனெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்க 10 கட்சிகளும் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
