அமைச்சுப் பதவிகளை துறக்கத் தயார் - கோட்டாபய மகிந்தவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர்

government vasudeva nanayakara ministers wimal weerawansa cabinet sri Lanka udaya gammanpila
By Kalaimathy Dec 30, 2021 02:08 PM GMT
Report

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை ஒருபோதும் மீறவில்லை என சிறிலங்கா அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விடயங்களை வெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு எனின், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை முன்னெடுப்பதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமைச்சுப் பதவிகளை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தயக்கமின்றி தீர்மானம் எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் விதத்தில் அமைச்சர்கள் சிலர் செயற்படுவதாகவும் அவர்கள் அமைச்சுப்பதவிகளை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியில் சென்று தமது விமர்சனங்களை முன்வைக்க முடியும் எனவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

குறித்த விமர்சனத்தை எதிர்கொள்ளும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமது நிலைப்பாட்டை தெரிவித்த போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் நிதி நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கு இல்லை எனவும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை நாம் வெளிப்படையாக தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை தாம் ஒருபோதும் மீறவில்லை எனவும், அமைச்சரவையில் ஒரு சில தீர்மானங்கள் மறைமுகமாக முன்னெடுக்கப்படுமாயின், இரகசிய ஆவணங்கள் கைச்சாத்திடப்படுகிறது எனின், அதுவும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாம் அரசாங்கத்தை குழப்பியடிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை எனவும் மாறாக அரசாங்கம் விடும் சில தவறுகளை திருத்திக்கொண்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டுக்கு உகந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தாம் கடமைப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைக்குள் தான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் அங்கம் வகிப்பது எவருக்கும் தடையாக உள்ளது என்றால் அதனை தம்மால் பெரிதுபடுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் நினைத்தால் எமது அமைச்சுப்பதவிகளை மாற்றவோ அல்லது அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கவோ முடியும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.



You may like this


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026