அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை - கடும் ஆவேசத்தில் சந்திரிகா!
நாட்டின் தற்போதைய நிலை பெரும் கவலையளிப்பதாக முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga) தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய நிலையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்பது புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவுமே சுதந்திரக் கட்சியின் அழிவிற்கு பொறுப்புக் கூற வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். கடுமையான போர் இடம்பெற்ற காலத்தில் கூட நாட்டின் பொருளாதாரத்தை தாம் கட்டியெழுப்பியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை மொட்டு கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டாம் என தாம் கோரியதாகவும் அதனை கட்சியின் தலைவர் மைத்திரி கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தம்மை கட்சியிலிருந்து நீக்கி, தொகுதி அமைப்பாளர் பதவியை பறித்த மைத்திரி இன்று மொட்டு கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறுகின்றார். இதனையே தாம் இரண்டு ஆண்டுகளாக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தில் இருப்பவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரிவதில்லை எனவும், காலை ஒன்றையும் மாலையில் ஒன்றையும் கூறுகின்றார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
You May Like This