சிங்கராஜவனத்திலிருந்து சீனா மேற்கொள்ளவுள்ள திட்டம் - பகீர் தகவலை அம்பலப்படுத்தினார் தேரர்
சிங்கராஜ வனத்திற்கு அருகே இரண்டு பாரிய குளங்களை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் எடுத்த தீர்மானம், பாரிய எதிர்ப்பலைகளை அடுத்து கைவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தமை முற்றிலும் பொய் எனவும் அவர் தனது கருத்து மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சித்துள்ளதாகவும் பாகியாங்கல ஆனந்த சாஹர தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தெல்லவ காட்டினை சுற்றி குளங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த காடும் சிங்கராஜ வனத்துடன் இணைந்த ஒன்று என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கராஜ காட்டில் குளம் கட்டாமல் நாம் மக்கள் எதிர்ப்புக்கு செவிசாய்த்து வேறு காட்டில் குளம் அமைப்பதாக மக்களுக்கு கூறவே சமல் ராஜபக்ஷ அவ்வாறானதொரு கருத்தை தெரிவித்ததாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கராஜ என்பது சிறுசிறு காடுகள் இணைந்த பாரிய வனம் என்றும் அதில் குளம் கட்டி சீனாவின் தொழிற்சாலை வர்த்தக நடவடிக்கைக்கு நீர் வழங்கவே அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் கூறினார்.
சீனாவிற்கு ஹம்பாந்தோட்டையில் வழங்கப்பட்டுள்ள 1500 ஏக்கர் காணியில் தொழிற்சாலை ஆரம்பிக்க நீர் தேவை என சீனா ஏற்கனவே கூறி வந்துள்ளதாக ஆனந்த சாஹர தேரர் தெரிவித்துள்ளார்.