இளநீர் ஏற்றுமதி: இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்
Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
Export
By Shadhu Shanker
இலங்கையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இளநீர் ஏற்றுமதி செய்ததன் மூலம் 3,439 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் தென்னை ஏற்றுமதியின் மூலம் 2,705 மில்லியன் ரூபாவாகும்.
எனவே கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, 734 மில்லியன் ரூபா அதிகமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இளநீர் ஏற்றுமதி
மேலும், வனவிலங்குகளால் தேங்காய்கள் சேதமடைவதால் வருடாந்தம் 300 மில்லியன் தேங்காய்கள் சேதமடைகின்றன.
எனவே இதனை கட்டுப்படுத்தினால் தென்னை விவசாயிகளின் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்று தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி