உறக்கமின்றித் தவிக்கும் ராஜபக்சக்கள்- நள்ளிரவைத் தாண்டியும் திடீர் சந்திப்புக்கள்!
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka
Government Of Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா அரசாங்கத்தை குடும்ப ஆட்சியின் மூலம் கொண்டு நடத்தும் ராஜபக்சாக்களிடையே திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு நேற்று இரவு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் ராஜபக்சஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.